இந்திய அரசு
தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை
வேளாண் & விவசாயிகள் நல அமைச்சகம்
இணையதளம்: ''www.plantauthority.gov.in'
PPVFRA
தாவர மரபணு பாதுகாப்பாளர் விருதுகள் 2022-2023
PPVFR (மரபணு நிதியிலிருந்து அங்கீகாரம் மற்றும் பரிசு) சட்டம் 2012 மற்றும் PPVFR (மரபணு நிதியிலிருந்து சமூக விருது)
சட்டம் 2018 உடன் படிக்கப்படும் PPVFR சட்டம் 2001ன் பிரிவு 39(1) (i)ன் கீழ்
விவசாயி(கள்) மற்றும் விவசாய சமூகத்தினருக்கான இந்தியாவின் மிக உயரிய விருது/பரிசு/அங்கீகாரம்
PPVFR சட்டம் 2001ல் உள்ள விவசாயிகள் உரிமைகளின் தனித்துவ அம்சம். இது, நிலபரப்புகளின் மரபணு வளங்கள் மற்றும் பொருளாதார தாவரங்களின் காட்டு உறவினர்களை
பாதுகாப்பதிலும் மற்றும் தேர்ந்தெடுத்தல் மூலம் அவற்றின் மேம்பாட்டிற்கான செயலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விருது, பரிசு மற்றும் அங்கீகார வசதியை வழங்குகிறது.
1. தாவர மரபணு பாதுகாப்பாளர் சமூக விருது
விருது: வருடத்திற்கு அதிகபட்சம் 5 விருதுகள், ஒவ்வொன்றும் ரூ.10,00,000/ (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு அடங்கியது. யார்
விண்ணப்பிக்கலாம்: நிலப்பரப்புகளின் மரபணு வளங்கள் மற்றும் பொருளாதார தாவரங்களின் காட்டு உறவினர்களை பாதுகாப்பதிலும் மற்றும் தேர்ந்தெடுத்தல்
& பாது காத்தல் மூலம் அவற்றை மேம்படுத்தும் செயலிலும் மற்றும் பாதுகாக்கப்பட்டவைகளை பல்வேறு அபிவிருத்திக்காக மற்றவர்களுடன் பகிரப்படும்
செயலிலும் ஈடுபட்டுள்ள அமைப்பு மூலம் முறையாக அனுப்பப்படும் விவசாய சமூகத்தினரின் விண்ணப்பம்.
2. தாவர மரபணு மீட்பர் விவசாயி பரிசு/அங்கீகாரம்
பரிசு: சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் ரூ.1,50,000/ (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) ரொக்கம் அடங்கிய அதிகபட்சம் 10 பரிசுகள்.
அங்கீகாரம்: சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ரூ.1,00,000/ (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) ரொக்கம் அடங்கிய அதிகபட்சம் 20 அங்கீகாரங்கள்.
யார் விண்ணப்பிக்கலாம்: நிலப்பரப்புகளின் மரபணு வளங்கள் மற்றும் பொருளியல் தாவரங்களின் காட்டு உறவினர்களை பாதுகாப்பதிலும் மற்றும் தேர்ந்தெடுத்தல் &
பாதுகாத்தல் மூலம் அவற்றை மேம்படுத்தும் செயலிலும் ஈடுபட்டுள்ள அமைப்புகள் மூலம் அனுப்பப்படும் விவசாயிகளின் விண்ணப்பங்கள். மேலும், PPVFR சட்டம்
2001ன் கீழ் பதிவு பெறக்கூடிய பல்வேறு வகைகளில் மரபணுக்களின் கொடையாளராக பாதுகாக்கப்பட்டவைகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட
அதிகாரிகளால் முறையே அனுப்பட வேண்டும். (சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து பெற்ற சான்றிதழ் இணைக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்ட அதிகாரிகளால்
அனுப்பப்பட வேண்டும்)
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான வழிகாட்டல் நெறிமுறைகளை ஆணையத்தின் இணையதளம் https://www.plantauthority.gov.in-ல் இருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது PPVFR ஆணையம், புதுடெல்லி அலுவலகம் அல்லது ராஞ்சி, கவுகாத்தி, பாலம்பூர், புனே மற்றும் சிவமோக்கா-ல் உள்ள
அதன் அலுவலகங்களில் (இணையதளத்தில் முகவரியை பார்க்கவும்) எந்த ஒரு வேலை நாளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை நேரிலோ அல்லது
தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை இந்தி அல்லது ஆங்கிலத்தில் சமர்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஆதார ஆவணம்(கள்) உடன்
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மட்டுமே சமர்பிக்க வேண்டும்."
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முறை: சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் / செயலாளர், பல்லுயிர் மேலாண்மை கமிட்டி அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை
அதிகாரி அல்லது சம்பந்தப்பட்ட மாநில விவசாய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குனர் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட பழங்குடியினர் மேம்பாட்டு அலுவலகம் மூலம்.
ஆயினும் தாவர மரபணு பாதுகாப்பாளர் சமூக விருதுகளுக்கான விண்ணப்பங்கள் விசயத்தில் சம்பந்தப்பட்ட மண்டல திட்ட இயக்குனர், இந்திய விவசாய ஆராய்ச்சி
கவுன்சில் (தற்போது இயக்குனர்-விவசாய தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (ATARI)-ICAR மூலமும் அனுப்பி வைக்கலாம்.
சமர்பிப்பதற்கான கடைசி தேதி: முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் ஆதார தகவல்கள், உரிமை கோரிக்கைக்கான சான்றுகள்/ ஆவணங்கள்!
விபரங்கள்/ அத்தாட்சிகளை இணைத்து விளம்பரம் வெளியான தேதியிலிருந்து 3 (மூன்று) மாதங்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி
வைக்க வேண்டும். முடிவு தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
உமா கந்த் துபே துணை பதிவாளர்
தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்,
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை,
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய அரசு
S-2, 'A' பிளாக், NASC காம்ப்ளக்ஸ், DPS மார்க், தோடாபூர் கிராமம் எதிரில், புதுடெல்லி-110012,
டெலிபோன்: 011-25842846, மின்னஞ்சல்: uk.dubey@gmail.com
CBC 01146/11/0001/2324
No comments:
Post a Comment