மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும்
தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள்,
சென்னை - 600006.
ந.க.எண்: 2411/எஃப்2/2021 நாள்.10.05.2023
பொருள் :
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 2023 –
2024 ஆம் கல்வியாண்டில் 4 மற்றும் 5 ஆம்
வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான ஆசிரியர்களுக்கான
பயிற்சி - 4 மற்றும் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து
ஆசிரியர்களையும் பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக.
பார்வை: 2022023
2024 ஆம் கல்வியாண்டிற்கான நிதிநிலை
அறிக்கை சார்ந்த அறிவிப்பு நாள்.31.03.2023.
பார்வையில் காணும் அறிவிப்பின்படி, 2023 - 2024 ஆம் கல்வியாண்டு
முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும்
எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2023-
2024ஆம் கல்வியாண்டு 4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும்
சார்ந்து தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவில் மற்றும் சமூக அறிவியல்
பாடங்களுக்கான முதல் பருவத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணி
மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 4 மற்றும் 5ஆம்
வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி 18.05.2023
முதல் 20.05.2023வரை மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி 25.05.2023 முதல்
27.05.2023 வரை நடைபெறவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக. 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து
ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சி 01.06.2023 முதல் 03.06.2023
வரை 3 நாள்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.
இப்பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் வகையில்
அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து பணிவிடுவிப்பு செய்யுமாறு அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment