அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

الخميس، 18 مايو 2023

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- 

 அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு இந்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பழைய விகிதப்படி வீடு கட்டுவதற்கான முன்பணத்தைப் பெற ஒப்புதல் கிடைக்கப் பெற்று, ஒரு தவணைத் தொகை கூட பெறாதவர்களுக்கு புதிய உயர்த்தப்பட்ட விகிதம் பொருந்தும். அவர்கள் ரூ.40 லட்சத்துக்குப் பதிலாக ரூ.50 லட்சம் வரையில் முன்பணத்தை பெற்றுக் கொள்ளலாம். முன்பணத்துக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், வீட்டை கட்டி முடிக்காதவர்களுக்கும் புதிய உயர்த்தப்பட்ட விகிதம் பொருந்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق