சர்வதேச ஒளி தினம் - துளிர்கல்வி

Latest

Search This Site

الثلاثاء، 16 مايو 2023

சர்வதேச ஒளி தினம்

சர்வதேச ஒளி தினம் 

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது... என்ற சினிமா பாடல் வரிகேற்ப மனிதர்களில் பெரும்பாலானோர் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான ஒளி என்றாவது ஒருநாள் வந்துவிடும் என்று எதிர்பார்ப்புடன்தான் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள். ஆம்... ஒளியானது உலகில் மனிதர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் ஒளி அதாவது வெளிச்சம் இன்றி இரவு நேரத்தை கழிப்பது என்பது மனிதர்களுக்கு பெரும் சவால்தான். 

ஆதிவாசி மனிதனின் காலம் தொடங்கி மின்சார வசதி இல்லாத காலங்கள் வரை நெருப்பு மூட்டி தீவைத்து, மண் எண்ணெய் விளக்குகளை பற்ற வைத்து வெளிச்சத்தை உண்டாக்கிதான் இரவு நேரத்தை கழித்து வாழ்ந்துள்ளனர் என்பதை அறிந்திருப்போம். இத்தகைய ஒளி என்பது மனிதனின் கண்களுக்கு புலப்படக்கூடிய அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் என்று வரையறுக்கப் ்படுகின்றது. ஒளியானது நேர்க்கோட்டு பாதையில் செல்லக்கூடியது. இதனால்தான் நிழல் உண்டாகிறது. 

மேலும் ஒளியின் நேர்க்கோட்டு இயக்கத்தால்தான் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. அதாவது சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும்போது அவைகளின் ஒளியானதும் ஒரே நேர்க்கோட்டில் சென்று நிழல்கள் உண்டாகி ஒன்றுக்கொன்று மறையும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. ஒளியானது இயற்கை ஒளி, செயற்கை ஒளி என 2 வகை உள்ளது. சூரியன், மின்மினிப்பூச்சி, ஜெல்லி மீன் ஆகியவையில் இருந்து வெளிப்படுவது இயற்கை ஒளிகள் ஆகும். விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் எலெக்ட்ரிக்கல் சாதனங்களில் இருந்து உருவாக்கப்படுவது செயற்கை ஒளிகளாகும். 

ஒளியை மூலமாக வைத்துதான் மனிதர்கள் தங்களது கண்களால் உலகில் அனைத்தையும் பார்க்க முடிகிறது. மருத்துவ சேவைகள், சினிமாக்கள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஒளியானது முக்கிய பங்கு வகிக்கிறது. சூரியனில் இருந்து வரும் ஒளி தாவரங்களின் உணவு உற்பத்திக்கு உதவுகிறது. ஒளியின் வேகம் மாறிலி ஆகும். சூரிய ஒளி பூமியை வந்தடைவதற்கு 8 நிமிடம் 20 வினாடி ஆகிறது. இப்படி எண்ணற்ற ஆச்சர்ய தகவல்களை கொண்ட ஒளியின் முக்கியத்துவத்தை பற்றியும், அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 16-ந்தேதி சர்வதேச ஒளி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

1960-ம் ஆண்டு மே 16-ந்தேதி கலிபோர்னியாவில் இயற்பியலாளர் தியோடர் மைமன் என்பவர் வெள்ளி பூசப்பட்ட மேற்பரப்புடன் கூடிய ரூபி கம்பியில் உயர் சக்தி கொண்ட பிளாஷ் விளக்கை லேசர் மூலம் ஒளிர செய்தார். இதனை நினைவு கூறும் வகையில் யுனஸ்கோ சார்பில் 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 16-ந்தேதி சர்வதேச ஒளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق