தினம் ஒரு தகவல் : காரின் சைடு மிரர் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, May 18, 2023

தினம் ஒரு தகவல் : காரின் சைடு மிரர்


தினம் ஒரு தகவல் : காரின் சைடு மிரர் 
 புதுமைகளும், புதுப்புது கண்டுபிடிப்புகளும் அதிகம் இடம்பெறும் துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. பேட்டரியால் ஓடும்கார்கள், ஹைட்ரஜனில் சீறும் கார்கள் என புதிய கண்டுபிடிப்புகள் தொடரும் அதே சமயத்தில் டிரைவர் இல்லாத கார்களை சாத்தியமாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பின்புறம் வரும் வாகனங்களைக் கண்டு வழிவிட காரின் உள்பகுதியில் அமைந்துள்ள கண்ணாடியும். 
பக்கவாட்டில் வரும் வாகனங்களைப் பார்க்க இருபுறமும் கண்ணாடிகளும் உள்ளன. காரை பின்னோக்கி இயக்க முயலும்போது அதற்கு உதவும் கேமிரா பொறுத்தப்பட்ட கண்ணாடி உதவுகிறது. இதுபோன்ற பல வசதிகள் விலை உயர்ந்த கார்களில் இடம் பெறுகின்றன. ஆனால் இப்போது இதுபோன்ற முன்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் (ரியர்வியூ மிரர்ஸ்) இல்லாமல் அதற்கு பதிலாக கேமிராக்களை பொறுத்தி அதன் மூலம் வாகனங்களை பார்த்து அதற்கேற்ப கார்களை செலுத்தும் வசதியோடு கார்கள் தயாரிக்கப்படுகின்றன. ரியர் வியூ கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிரா பயன்படுத்துவதால் அதிக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 
ஏனெனில் தற்போது புழக்கத்தில் உள்ள ரியர் வியூ கண்ணாடிகளில் `பிளைன்ட் ஸ்பாட்' எனப்படும் பகுதிகள் துல்லியமாகத் தெரியாது. ஆனால் கேமிராவில் இதுபோன்ற குறைகள் கிடையாது. பின்னால் வரும் வாகனத்தின் முழுத் தோற்றம் துல்லியமாக தெரியும். மேலும் இரவில் வாகனங்களை பார்ப்பதற்கும், தேவைப்பட்டால் அகலமாக (வைட்) கேமிரா லென்சை இயக்கவும் இதில் வசதி உள்ளது. ரியர்வியூ இல்லாத கார்கள் உருவானால் மேலும் அழகிய தன்மை கொண்ட கார்களை வடிவமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமடைந்துள்ளன. ரியர் வியூ கண்ணாடிகள் வழக்கமாக டிரைவரின் பார்வைபடும்படி உரிய இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். ஆனால் கேமிராவுக்கு அது தேவையில்லை. 
கேமிராவை வாகனத்தின் எந்த இடத்திலும் அழகூட்டும் வகையில் பொறுத்தலாம். மேலும் அதிக வேகத்தில் செல்லும் வகையில் வாகனங்களை வடிவமைக்கலாம். வாகனத்தின் வேகத்துக்கு முட்டுக்கட்டைபோடும் விதமாக ரியர் வியூ கண்ணாடிகளை போல கேமிராக்கள் இருக்காது என்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும். கேமிரா பொறுத்தப்பட்டிருந்தால் அருகில் வரும் கார்கள் மட்டுமின்றி சைக்கிளில் வருவோர், போவோர், பாதசாரிகள் உள்ளிட்ட நுட்பமான படங்களும் கேமிராவில் பதிவாகும். இதனால் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் டிரைவர் பார்த்து அதற்கேற்ப வாகனத்தை இயக்க முடியும். 
சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது இத்தகைய கேமிரா பொறுத்தப்பட்ட கார்களை தங்களது எதிர்கால மாடல்களில் பொறுத்தத் தொடங்கியுள்ளன. கேமிராவில் பதிவாகும் படங்கள் திரையில் உடனுக்குடன் தெரிந்தாக வேண்டும். அதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கையை நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. ஒருவேளை திரையில் படங்கள் தோன்றுவதில் பிரச்சினை ஏற்பட்டால் அதை டிரைவர்கள் எவ்விதம் எதிர்கொள்வது என்பதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் பணியில் இத்துறை வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment