தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-06
பிறப்பிப்பவர். க.நந்தகுமார், இ.ஆ.ப
ந.க.எண்.019420 / அ4 / இ3/2023, நாள்.09.05.2023
:
/மின்னஞ்சலில்/
***
பொருள்:
நிருவாகம்
பள்ளிக்கல்வி தமிழ்நாடு அமைச்சுப்
பணியாளர்- உதவியாளர் / இளநிலை உதவியாளர்-
பள்ளி வேலை நேரத்திற்கு தகுந்தாற்போல் பணி
நேரத்தை காலை 9.00 மணி முதல் 4.45 மணி வரை
மாற்றியமைத்து ஆணையிடுதல் - தொடர்பாக
பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரமானது
காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை உள்ளதால் பள்ளி வருகைப் பதிவேட்டை
முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவலகப் பணிகளை
மேற்கொள்வதில் நிருவாக தொய்வு ஏற்படுவதாக தலைமை ஆசிரியர்கள்,
முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள்
தெரிவித்துள்ளனர்.
பள்ளியின் அலுவலக பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியரல்லாத பணியாளர்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய
அவசியம் மற்றும் தேவை எழுகிறது. மேலும், அரசுப் பள்ளிகளின் நிருவாக
மேம்பாட்டிற்கு ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு
இன்றியமையாதது. DOWNLOAD FULL PROCEEDINGS HERE
No comments:
Post a Comment