சுற்றறிக்கை-6
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள் சென்னை-6
ந.க.எண். 21243 / சி3 / இ1 /2023 நாள். || .05.2023
பொருள்:
பள்ளிக் கல்வி-2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள்
பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி தகவல்
மேலாண்மை முறைமை EMIS இணைய வழி
மூலம் நடைபெறுதல் - திருத்திய கலந்தாய்வு
அட்டவணை வெளியிடுதல்-சார்பு.
பார்வை:
1) சென்னை-6 பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும்
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
இதே எண்ணிட்ட நாள்.26.4.2023,02.05.2023
06.05.2023
பார்வையில் காணும் செயல்முறைகளின் மூலம் 2022-23ம்
கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி
உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல்
மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 06.05.2023 நாளிட்ட
செயல்முறைகளில் நிருவாக காரணங்களுக்காக மேற்படி பொதுமாறுதல்
கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இணைப்பில் காணும் கலம் 6ல் தெரிவித்துள்ளவாறு
திருத்திய காலஅட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்
கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
No comments:
Post a Comment