கணினி வழித் தேர்வு சார்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 5, 2023

கணினி வழித் தேர்வு சார்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீட்டு எண்:39/2023 நாள்:05.05.2023 

13.05.2023 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் 14.05.2023 அன்று முற்பகல் மற்றும் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த நூலக பணிகள்/ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (நேர்முகத் தேர்வு / நேர்முகத் தேர்வு அல்லாத) காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு. 

செய்திக்குறிப்பு 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 4/2023, நாள் 31.01.2023 இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள்/ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 13.05.2023 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல் ) மற்றும் 14.05.2023 அன்று (முற்பகல்) நடைபெற உள்ளது. 
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் ( Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.  அஜய் யாதவ், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

No comments:

Post a Comment