1 முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் (FAQ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - சார்பு - இணை செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

الجمعة، 9 يونيو 2023

1 முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் (FAQ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - சார்பு - இணை செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.2411/F2/2021, நாள். 9 .06.2023 

பொருள்: 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்ம் தொடக்கக் கல்வி சென்னை-6 : 1 முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் (FAQ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - சார்பு. 

பார்வை: 1. அரசாணை நிலை எண்.147, பள்ளிக் கல்வித் (கஆப) துறை நாள் 21.10.2021 

2.2023-24ம் ஆண்டிற்கான நிதித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாள். 20.03.2023 

பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 1 முதல் 3ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. பார்வை(2) ல் காணும் அறிவிப்பின்படி 4 மற்றும் 5ம் வகுப்பிற்கு 2023-24 கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலை அறிய அடிப்படை திறனாய்வு (Baseline Survey) எண்ணும் எழுத்தும் செயலியில் கிழ்கண்டவாறு நடத்திட வேண்டும். 

Subject :  Tamil, English and Maths

Start Date :  June 21, Wednesday 

End date : June 30, Friday 

மேலும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணை (Time table), வளரறி மதிப்பீடு(ஆ) (FA(b) மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (SA) கால அட்டவணை மற்றும் 4 மற்றும் 5ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் 
CLICK HERE TO DOWNLOAD FULL PROCEEDINGS

ليست هناك تعليقات:

إرسال تعليق