பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் - துளிர்கல்வி

Latest

Search This Site

الثلاثاء، 13 يونيو 2023

பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். 

கல்வித்துறையின் உறுதிமொழி 

சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் இன்றைய தினம் 8 ஆயிரத்து 340 நடுநிலைப்பள்ளிகள், 3,547 உயர்நிலைப்பள்ளிகள், 4,221 மேல்நிலைப்பள்ளிகள் என ஏறத்தாழ 16 ஆயிரத்து 108 பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 46 லட்சத்து 22 ஆயிரத்து 324 மாணவ-மாணவிகள் இந்த கல்வியாண்டை தொடங்கி இருக்கிறார்கள். அதேபோல 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 26 லட்சம் மாணவர்கள் இந்த கல்வியாண்டை தொடங்கி இருக்கிறார்கள். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை இன்னும் அதிகரித்திட ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உறுதி ஏற்று பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம். 

தற்காலிக ஆசிரியர்கள் விவகாரம் 

ஒரு பள்ளி திறக்கும்போது அனைத்துவிதமான அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் அனைத்து பணிகளும் சிறப்பாகவே கையாளப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் முதலாம் வகுப்புக்கு 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளார்கள். மாணவர்களுக்கு பஸ் பாஸ் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் சீருடை உள்ளிட்ட உபகரணங்கள் ஜூலை மாதத்துக்குள் முழுமையாக வழங்கி முடிக்கப்படும். தற்போது பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலமாகவே தேவையான விளையாட்டு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தனிப்பாடமாக கொண்டு வருவது குறித்து பரிசீலனை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களை நிரந்தரப்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இருந்தாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ‘டெட்’டுக்கு பிறகு தேர்வா? ஆசிரியர்களுக்கு ‘டெட்' தேர்வுக்கு பிறகு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுமா? என்று கேட்கிறீர்கள். இப்போது வரைக்கும் அதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. போட்டித்தேர்வுகள் குறித்து அரசாணை 149 தொடர்பாக தேர்தல் அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை. தேர்தல் வாக்குறுதிகளின்படி, போட்டித்தேர்வு இல்லாத வகையில் அதை எப்படி செயல்படுத்த முடியுமோ... அதற்கான உரிய வழிமுறைகளை பார்ப்போம் என்று சொல்லி இருக்கிறோம். இதுகுறித்து கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும். தமிழக அரசின் நிதிநிலை சரியாகும் போது, உரிய உதிரி பாகங்கள் கிடைக்கும்போது லேப்டாப் வழங்கப்படாத அனைத்து பள்ளிகளுக்கும் லேப்டாப் வழங்கப்படும். பணத்தை கொடுத்ததும் உடனே லேப்டாப்பை வாங்கி தந்துவிடுவது போல அல்ல இது. கொரோனாவுக்கு பிறகு மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி-விற்பனை குறைந்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் டேப் கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறோம். அதேவேளை லேப்டாப் வழங்கவேண்டியது இருக்கிறது. எனவே டேப் கையாளுவது எளிதா? அல்லது லேப்டாப் கையாளுவது எளிதா? என்ற ஆலோசனை வேறு போய்க்கொண்டு இருக்கிறது. அரசின் நிதிநிலை சரியாகும்போது, உரிய நடவடிக்கைகள் கையாளப்படும். 

பிளஸ்-1 பொதுத்தேர்வு 

பிளஸ்-1 பொதுத்தேர்வு இருக்கிறதா, இல்லையா? என்பதெல்லாம் மாநில கல்வி கொள்கை தயாராகி வரும்போது தெரியும். தற்போது வரை பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் நிலை இல்லை. ஒருவேளை அதுபோல நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்தால் நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவது குறித்து உரிய ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.SOURCE NEWS

ليست هناك تعليقات:

إرسال تعليق