10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 24, 2023

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை 

சென்னை தரமணியில் இயங்கும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.டி.டி.டி.ஆர்) மூலம் 34 மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 17-7-2023 அன்றைய தேதிப்படி 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-7-2023. ஆன்லைனில் விண்ணப்பித்த படிவத்தை டவுன்லோடு செய்து உரிய ஆவணங்களின் நகல்களை சுய கையொப்பமிட்டு இயக்குனர், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு 31-7-2023-க்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விரிவான விவரங்களை https://www.nitttrc.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். http://www.nitttr2023recruitment.in/

No comments:

Post a Comment