பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

الأحد، 4 يونيو 2023

பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பி.எஸ்சி. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற நேரடி 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்து இருக்கிறது. 

அதன்படி, வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சான்றிதழ்களையும் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பப்பதிவு கட்டணமாக ரூ.300-ஐ இணையதளம் மூலமாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த முடியாதவர்கள் வரைவோலையாக தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையம் வாயிலாக சமர்ப்பிக்கலாம். இதில் எஸ்.சி., எஸ்.சி (ஏ), எஸ்.டி. பிரிவினருக்கு பதிவு கட்டணம் கிடையாது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in என்ற இணையதளங்களில் சென்றும், 04565-230801, 224528 என்ற எண்கள் மூலமாக தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق