குரூப்-2 மற்றும் பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்பட்ட அரசு காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. தகவல் When is the result of government vacancies held for group-2 and various posts? TNPSC Information - துளிர்கல்வி

Latest

Search This Site

الأربعاء، 28 يونيو 2023

குரூப்-2 மற்றும் பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்பட்ட அரசு காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. தகவல் When is the result of government vacancies held for group-2 and various posts? TNPSC Information

குரூப்-2 மற்றும் பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்பட்ட அரசு காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. தகவல்  When is the result of government vacancies held for group-2 and various posts? TNPSC Information

குரூப்-2 உள்பட பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்பட்ட அரசு காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்ற தகவலை டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து உள்ளது. குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழ்நாடு அரசின் கீழ் வரும் துறைகளில் காலியாக இருக்கும் அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வழங்குகிறது. அந்த வகையில் இதுவரை நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுக்கான முடிவு எப்போது வெளியாகும்? என்ற தகவலை அட்டவணையுடன் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 446 இடங்களுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 

அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடந்து முடிந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவு வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை மாதம்... அதேபோல், குரூப்-1 பதவிகளில் வரும் 95 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி வெளியான நிலையில், முதன்மை தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. 

 மேலும், 10 வன பயிற்சியாளர் பணியிடங்கள், 178 உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள், குரூப்-3-ல் வரும் ஒருங்கிணைந்த சிவில் சேவைகள் துறையில் 33 பணியிடங்கள், புள்ளியியல் துறை 217 பணியிடங்கள், 731 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், 9 உதவி வன பாதுகாவலர் பணியிடங்கள், 27 நூலகர் பணியிடங்கள், 121 வேளாண் அலுவலர், வேளாண் உதவி இயக்குனர் பணியிடங்கள் போன்றவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவு அடுத்த மாதத்தில் (ஜூலை) வெளியிடப்பட உள்ளன. 

 ஆகஸ்டு மாதம்... 825 சாலை ஆய்வாளர் பணியிடங்கள், 1,083 ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணியிடங்கள் ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் என்றும், இதுதவிர மீன்வளத்துறையில் 66 ஆய்வாளர் பணியிடங்களுக்கு வாய்மொழி தேர்வு அடுத்த மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடக்கிறது என்றும் அறிவித்து இருக்கிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق