கர்நாடக இசை 3 ஆண்டு டிப்ளோமா படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 5 يونيو 2023

கர்நாடக இசை 3 ஆண்டு டிப்ளோமா படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கர்நாடக இசை 3 ஆண்டு டிப்ளோமா படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு 

சென்னை மியூசிக் அகாதெமியின் சார்பில் நடத்தப்ப டும் கர்நாடக இசையின் 3 ஆண்டு டிப்ளோமா படிப்புக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து சென்னை மியூசிக் அகாதெமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை மியூசிக் அகாதெமியின் சார்பில் கடந்த 2010-ஆம் ஆண்டில் இருந்துகர்நாடகஇசையில் டிப்ளோமா படிப்புகள் நடத்தப்பட்டுவருகின் றன. இந்தப் படிப்புகளில் சேர்ந்து ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த இசை வகுப்பில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடம் கற்றுத் தருகின்றனர். இதன் மூலம் பிரபல இசை மேதைகளிடம் இசை பயிலும் வாய்ப்பை இளம் மாணவர்கள் பெறுவர். அதன்படி சென்னை மியூசிக் அகாதெமியின் டிப்ளோமா படிப்புகள் நடப்பாண்டில் ஜூலையில் தொடங்குகிறது. 
இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்களுக்கான கர்நாடக இசை வகுப்புகள் ஜூலை மாத மத்தியில் தொடங்கி நவம்பர் இறுதி வரையும், தொடர்ந்து ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரையும் நடைபெறும். சென்னை மியூசிக் அகாதெமியில் திங்கள் முதல் வெள்ளி வரை (வாரத் தில் ஐந்து நாள்கள்) காலை 8 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை வகுப் புகள் நடைபெறும். இசை வகுப்பில் சேர தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல் வித்தகுதிபிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல்30-க்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் குறைந்தபட்சம் வர்ணங்கள், கிருதிகள் பாடக் கூடியவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் தங்க ளின் இசைப் பயிற்சியின் முழு விவரங்கள் அடங்கிய சுயவிவரக் குறிப்பை மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். மேலும்விவரங்கள் Www.musicacademymadras.inஎன்றஇணை யதளத்தில் உள்ளது. மேலும் சந்தேகங்களுக்கு 044-28112231/28116902/ 28115162 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனதெரி விக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق