திருச்சி என்.ஐ.டி.யில் பேராசிரியர் பணி! தகுதி பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., பிஎச்.டி!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 24, 2023

திருச்சி என்.ஐ.டி.யில் பேராசிரியர் பணி! தகுதி பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., பிஎச்.டி!!

திருச்சியில் இயங்கும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 64 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., பிஎச்.டி என சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு சார்ந்த துறைப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 4-7-2023 அன்றைய தேதிப்படி 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. கேட், நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-7-2023. ஆன்லைனில் விண்ணப்பித்த படிவத்தை டவுன்லோடு செய்து உரிய ஆவணங்களின் நகல்களை சுய கையொப்பமிட்டு ‘பதிவாளர், தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி-620015’ என்ற முகவரிக்கு 11-7-2023 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான நடைமுறைகளையும், தேர்வு செய்யப்படும் விதம் குறித்த தகவல்களையும் https://recruitment.nitt.edu/faculty2023/ என்ற இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment