வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புதிய அம்சங்கள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 22, 2023

வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புதிய அம்சங்கள்!

வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புதிய அம்சங்கள்! 

வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தடுக்கும் வசதி வழங்கப்படுகிறது. புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் அம்சம் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. மற்றொரு அம்சம் பிரைவசி செக்கப் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது. 

கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக குற்றம்சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் புதிதாக சைலன்ஸ் அன்னோன் கால்ஸ் (silence unknown calls) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள செய்யும். இதன் மூலம் பயனர் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லாதவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் பயனர்களை தொந்தரவு செய்யாது. எனினும், நோட்டிஃபிகேஷன் பகுதியில் அழைப்பு வந்ததற்கான தகவல் மற்றும் கால்ஸ் டேபில் அழைப்பு விவரம் இடம்பெற்று இருக்கும். 

 பயன்படுத்துவது எப்படி? - வீடியோவில் பார்க்கலாம்: https://youtu.be/ybRoxlRVyWw 

அந்த வகையில் புதிய அம்சம் அழைப்புகளை முழுமையாக தடுக்காது. மாறாக, அழைப்பு வந்த தகவலை வழங்கி, யாரோ அழைப்பை மேற்கொள்ள முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கும். புதிய அம்சம் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் பிரைவசி செக்கப்: பெயருக்கு ஏற்றார்போல் புதிய வாட்ஸ்அப் பிரைவசி செக்கப் அம்சம் கொண்டு செயலியில் கிடைக்கும் பிரைவசி செட்டிங்களை இயக்க வழி செய்கிறது. 

வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள பிரைவசி செக்கப் ஆப்ஷனில், ஸ்டார்ட் செக்கப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பிரைவசி செட்டிங் நிறைந்த மெனு திரையில் காணப்படும். இதில் யார் உங்களை தொடர்பு கொள்ள முடியும், தனிப்பட்ட விவரங்களை கட்டுப்படுத்துவது, சாட் பிரைவசி என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். பல்வேறு வகையான பிரைவசி செட்டிங்களை ஒரே பெயரின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாக புதிய பிரைவசி செக்கப் உள்ளது.

No comments:

Post a Comment