எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் புதிய மாற்றங்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 24, 2023

எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் புதிய மாற்றங்கள்

எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் புதிய மாற்றங்கள்

தேசிய மருத்துவ ஆணையம் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. 

அதில் 9 ஆண்டுகளுக்குள் மருத்துவ படிப்பை படித்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்பு விதிமுறைகள் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' தேர்வு மதிப்பெண் அவசியம். 

அந்த வகையில், ‘நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.), மருத்துவ பட்டப்படிப்பு விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவந்து, 2023-ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகளாக அறிவித்துள்ளன. கடந்த 1997-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படிதான் இதுவரை மருத்துவ பட்டப்படிப்பு கல்விக்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. 

இந்த விதிமுறைகள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகரித்து அதன் அடிப்படையில் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் 2023-24-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகின்றன. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் அடிப்படையிலான தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களின் விவரங்கள் வருமாறு:- குடும்பத்தை தத்தெடுக்க வேண்டும்

 4½ ஆண்டு மருத்துவ படிப்பு 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டம் 12 மாதங்களும், 2-ம் கட்டம் 12 மாதங்களும், 3-ம் கட்டத்தின் முதல் பகுதி 12 மாதங்களும், இறுதி பகுதி 18 மாதங்களும் என மொத்தம் 54 மாதங்களாக (4½ ஆண்டுகள்) பிரிக்கப்பட்டுள்ளன.

 ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் மருத்துவ படிப்புகள் தொடங்கும். * முதலாம் ஆண்டு வகுப்பில் சேரும் மாணவ-மாணவிகளின் பாடத்திட்டத்தின் முதல் நாளில் இருந்து ஒரு குடும்பத்தை தத்தெடுத்து, அவர்களுக்கான மருத்துவ தேவைகளை கேட்டறிந்து அதற்கான உதவிகளை அவர்கள் செய்ய வேண்டும். இது முதல் 2 கட்டங்களுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் 3-ம் கட்டத்தின் முதல் பாதி பாடத்திட்டத்தில் மட்டும் அவர்கள் பின்பற்ற வேண்டும். 88 மணி நேரங்கள் இதற்காக மாணவர்கள் செலவிடுவதோடு, தத்தெடுக்கும் குடும்பத்தின் விவரங்களை பதிவு புத்தகத்தின் மூலம் பின்பற்றுவது அவசியம். இது பாடத்திட்டத்தில் கட்டாயப்பகுதியாக இடம்பெறும். 9 ஆண்டுகளுக்குள்... 

 முதல் கட்டத்தில் தேர்ச்சி பெற ஒரு மாணவருக்கு 4 முயற்சிகளுக்கு மேல் அனுமதி வழங்கப்படாது. இதற்கு முன்பு மருத்துவ படிப்புகளை எத்தனை ஆண்டுகளில் வேண்டுமானாலும் முடிக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் இந்த புதிய வழிகாட்டுதலில், படிப்பு தொடங்கியதில் இருந்து 9 ஆண்டுகளுக்குள் மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்ய வேண்டும். 

 பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்காக தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 3 முதல் 6 வாரத்துக்குள் மறுதேர்வு நடத்தப்படும். அதில் அந்த மாணவர் தேர்ச்சி பெற்று, அந்த ஆண்டில் மற்ற மாணவர்களோடு சேர்ந்து படிக்க முடியும். 

பாடத்திட்டங்களை பொறுத்தவரையில், முதல்கட்டத்தில் உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் பாடங்களும், 2-ம் கட்டத்தில் நோயியல், நுண்ணியிரியல், மருந்தியல் பாடங்களும், 3-ம் கட்டத்தில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல், சமூக மருத்துவம், பொது மருத்துவம், தோல் மருத்துவம், மனநல மருத்துவம், சுவாச மருத்துவம், குழந்தை மருத்துவம், பொது சிகிச்சை, எலும்பியல், மயக்கவியல், கதிரியக்கவியல், கண் மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் ஆகிய பாடங்களும் இடம்பெறும். இந்த பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே பல்கலைக்கழக தேர்வுகள் நடத்தப்படும். 75 சதவீத வருகைப்பதிவு 

முதல் 2 கட்டங்களுக்கான படிப்புகளில் கற்பித்தல் என்பது தலா 39 வாரங்களை கொண்டதாகவும், 3-வது கட்டத்தில் 62 வாரங்களை கொண்டதாகவும் இருக்கும். மற்ற நாட்கள் பல்கலைக்கழக தேர்வு, தேர்வு முடிவு மற்றும் விடுமுறையில் வரும்.

புதிய கற்பித்தல், கற்றல் கூறுகளும் இந்த புதிய விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள மருத்துவத்துக்கான ஆதார படிப்புகளின் (பவுண்டேஷன் கோர்ஸ்) குறிக்கோள் என்பது மருத்துவத்தை ஒரு மாணவர் திறம்பட படிக்க தயார்ப்படுத்துவது ஆகும். அதற்கேற்றாற்போல், சில படிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த படிப்புகளை மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வாக மேற்கொள்ளலாம். மொத்தம் 160 மணி நேரங்கள் இதற்காக அவர்கள் செலவிடவேண்டும். 

வகுப்புகளில் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப்பதிவும், செய்முறை மற்றும் மருத்துவமனை பணிகளில் குறைந்தபட்சம் 80 சதவீதம் வருகைப்பதிவும் இருந்தால் மட்டுமே பல்கலைக்கழக தேர்வில் பங்கேற்க முடியும். வரவேற்பு இந்த புதிய வழிகாட்டுதல்களில் மருத்துவ மாணவர்கள், ஒரு குடும்பத்தின் மருத்துவ தேவைகளுக்காக அவர்களை தத்தெடுப்பது என்பது மராட்டிய மாநிலம் சேவகரம் நகரத்தில் உள்ள முதல் கிராமப்புற மருத்துவ கல்லூரி என்ற பெயரை பெற்று இருக்கும், மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பின்பற்றப்படும் திட்டத்தின் முயற்சியால் ஈர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த மாற்றங்கள் ‘நேஷனல் எக்சிட் டெஸ்ட்' என்று கூறப்படும் ‘நெக்ஸ்ட்' தேர்வை மனதில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய வழிகாட்டுதல்களில் பல்வேறு விதமான விஷயங்கள் பேசும் பொருளாக இருந்தாலும், மருத்துவ படிப்பு மாணவர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்று இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment