சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 7, 2023

சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கலை விருதுகள் தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003-ம் ஆண்டு முதல் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட அரசு ஆணையிடப்பட்டுள்ளது. 

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2002-2003-ம் ஆண்டு முதல் 2021-2022-ம் ஆண்டு வரையில் 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன. 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான கலை விருதுகள் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கலாம் 

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி மலை இளமணி விருது 18 வயதும், அதற்குட்பட்ட கலைஞர்களுக்கும், கலை வளர்மணி விருது 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கும், கலை சுடர்மணி விருது 36 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கும், கலை நன்மணி விருது 51 முதல் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கும், கலை முதுமணி விருது 66 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் 30 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். இதற்கு முன்னர் மாவட்ட விருதுக்கு விண்ணப்பித்திருந்த கலைஞர்கள் 2022-23 மற்றம் 2023-24ம் ஆண்டு விருது தேர்விற்கு தங்களது ஒப்புதல் வழங்கிட வேண்டும். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெற சேலத்தில் உள்ள கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment