வாட்ஸ்-அப்பில் ஹேக்கிங் வைரஸ் பரவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 15, 2023

வாட்ஸ்-அப்பில் ஹேக்கிங் வைரஸ் பரவல்



வாட்ஸ்-அப்பில் ஹேக்கிங் வைரஸ் பரவல் வாட்ஸ்-அப்பில் ஆண்டு விழா, அப்டேட் லிங்குகளை அனுப்பி ஹேக்கிங் வைரஸ் பரவி வருவதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படியும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஆன்லைன் மோசடி சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து விட்டது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்-அப் செயலியும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. 
இந்த நிலையில் வாட்ஸ்-அப்பில் லிங்குகளை அனுப்பி அதன் மூலம் செல்போன்களில் உள்ள விவரங்கள், தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடைபெறும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு, வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன், பரிசு பொருட்கள் விழுந்துள்ளது என கூறி பல்வேறு வகைகளில் ஆன்லைனில் மோசடியில் மர்மநபர்கள் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கடந்த ஓரிரு தினங்களாக வாட்ஸ்-அப்பில் ஒரு மோட்டார் நிறுவனத்தின் ஆண்டு விழா என்ற லிங்க் பரவலாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 
இந்த லிங்கில் உள் சென்றால் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, இந்த லிங்கை பிறருக்கும் பகிர்ந்தால் பரிசு என கூறுவதால் இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஹேக்கர்ஸ் வசம் தகவல்கள் இதேபோல வாட்ஸ்-அப் அப்டேட் பிங்க் வாட்ஸ்-அப் என்ற லிங்கும் பரவி வருகிறது. இந்த 2 லிங்குகளும் போலியானவை எனவும், ஹேக்கிங் வைரஸ் லிங்குகள் எனவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். 
அவ்வாறு கிளிக் செய்தால் அவரது வாட்ஸ்-அப் முழுவதும் ஹேக்கர்களின் வசம் சென்று தானாக மெசேஜ் பதிவாகிறது. இதனால் உங்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்களும் திருடப்படலாம். எனவே யாரும் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சைபர் கிரைம் தொடர்பாக உதவி மையத்தை 1930 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

GOOGLE TRANSLATED

Hacking virus spreading on WhatsApp Cybercrime police have advised public to be alert that hacking virus is spreading by sending update links on WhatsApp. The use of WhatsApp, the online fraud social networking site, has increased nowadays. With the increase in the number of smartphone users, WhatsApp has become a part of daily life for exchanging information.

In this situation, by sending links on WhatsApp, through which the details and information in the cell phones are stolen and fraud is also increasing. Miscreants engage in various online scams claiming employment, low interest loans from banks, gift items. In this situation, a link of a motor company's anniversary has been spreading widely on WhatsApp for the past couple of days. This is shared by many.

If you enter this link, it will answer the questions asked in it, and many people are sharing this because it is said that if you share this link with others, it will be a gift. Information in the possession of hackers Similarly WhatsApp update pink WhatsApp link is also spreading. Cybercrime police have advised that these 2 links are fake and hacking virus links. Do not click on these links.

If he clicks on that, his entire WhatsApp goes to the hackers and the message is recorded automatically. This can lead to theft of your bank account and personal information. So no one should click on this link. Pudukottai District Cyber Crime Police have advised the public to be alert. They are also creating awareness that they can contact the help center on the number 1930 and report the complaint on the website www.cybercrime.gov.in.

No comments:

Post a Comment