சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

الثلاثاء، 13 يونيو 2023

சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

தேர்வு முடிந்த 14 நாட்களிலேயே சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு நாடு முழுவதும் 14 ஆயிரம் பேர் தேர்ச்சி சென்னை, ஜூன்.13- சிவில் சர்வீசஸ் பதவிகளில் காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு எழுதியவர்களில் 14 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். 


 சிவில் சர்வீசஸ் பதவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 24 வகையான சிவில் சர்வீசஸ் பதவிகளில், காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. மொத்தம் 1,105 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான தேர்வர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். முதல்நிலை தேர்வு இதனையடுத்து எழுத்துத்தேர்வு கடந்த மாதம் 28-ந்தேதி நாடு முழுவதும் 76 நகரங்களில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதியதாகவும, தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்து சுமார் 30 ஆயிரம் பேர் எழுதியதாகவும் தகவல்கள் தெரிவித்தன. 

 சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு முதல் நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு ஆகிய 3 தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களே இறுதியில் இடங்களை தக்க வைக்க முடியும். அதன்படி, 1,105 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. 14 நாட்களில் தேர்வு முடிவு முதல் நிலை தேர்வை பொறுத்தவரையில், கடந்தாண்டு தேர்வுகளுடன் ஒப்பிடும்போது வினாத்தாள் சற்று கடினமாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதனால் தேர்ச்சி சற்று குறைய வாய்ப்பு இருப்பதாகவே தேர்வு முடிந்தபோது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வு முடிவு வருகிற 19 அல்லது 20-ந்தேதிகளில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தது. 

ஆனால் தேர்வு நடைபெற்று முடிந்த 14 நாட்களிலேயே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவுகளை நேற்று அதிரடியாக வெளியிட்டது. கடந்த ஆண்டு முதல் நிலை தேர்வு முடிவு, தேர்வு நடைபெற்ற நாளில் இருந்து 17 நாட்கள் கழித்து வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டில் 19 நாட்களில் முதல் நிலை தேர்வு முடிவை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பார்க்கும்போது, முதல் நிலை தேர்வு முடிவை 14 நாட்களில் வெளியிட்டு தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கொடுத்திருக்கிறது. 

 14 ஆயிரம் பேர் தேர்ச்சி அந்த வகையில் நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதியதில், 14 ஆயிரத்து 624 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியதில், 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு குறித்த அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிட இருக்கிறது. முதன்மை தேர்வு 5 நாட்களுக்கு நடத்தப்படும். அதன்படி வருகிற செப்டம்பர் 15-ந்தேதி முதல் முதன்மை தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முதன்மை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வை எதிர்கொள்வார்கள். அதிலும் சாதிப்பவர்கள், சிவில் சர்வீசஸ் பதவிகளில் தங்கள் பெயரை இடம் பெற செய்வார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق