தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 21, 2023

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல்

(தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) சி.ஐ.டி வளாகம், தரமணி, சென்னை 600 113 நிம பகுதி நேர கெளரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் இந்நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் & திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு மற்றும் உயிர்ப்பூட்டல் & காட்சிப்பயன்) பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்காக பாடத்திட்டங்கள் பயிற்றுவிப்பதற்கு பகுதி நேர கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி : 1. Diploma / Bachelor of Visual Arts in respective courses அனுபவம் ஊதியம் : சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழா 2. தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களில் முதுநிலை அல்லது M.Phil பட்டம் பெற்றவர்கள். திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சம்மந்தப்பட்ட பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும்.

 (கல்வி நிறுவனங்களில் திரைப்படம் தொழில்நுட்பம் தொடர்பாக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்) : கருத்தியல் பாடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.600/-, செய்முறை பாடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- என மாத ஊதியம் அதிகபட்சம் ரூ.30,000/- வரை வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட அனுபவமும், தகுதியும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது உரிய சான்றிதழ்களுடன் சுய விவர படிவத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு 30.06.2023 அன்று மாலை 05.00 மணிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகுதிவாய்ந்த நபர்கள் 90 நாட்களுக்கு உட்பட்டு தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள். முகவரி : முதல்வர் (மு.கூ.பொ) அவர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் (ம) தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், தரமணி, சென்னை 600 113. செ.ம.தொ.இ/682/வரைகலை/2023 "சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்." முதல்வர் (மு.கூ.பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் (ம) தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்.

No comments:

Post a Comment