பழங்களை தோலோடு சாப்பிடலாமா? Can you eat fruits with skin? - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 21, 2023

பழங்களை தோலோடு சாப்பிடலாமா? Can you eat fruits with skin?

பழங்களை தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது, என்கிறார்கள். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. 

இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும். ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசியம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக்களும் நார்ச்சத்தும் அதிகம். இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. 

இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால்தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதிகரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந்து சாப்பிடும்போது, மேற்சொன்ன சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதோடு, ரத்தச் சர்க்கரை உடனே அதிகரிக்கும். 

 கொய்யா பழத்தோலில் சருமத்தைக் காக்கும் வைட்டமின்கள் பல உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குச் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் குணம் மாம்பழத் தோலுக்கு உண்டு. சப்போட்டா பழத் தோலில் உடலில் காயங்களை விரைந்து ஆற்றும் குணமுள்ள வேதிப்பொருட்கள் நிரம்பியுள்ளன. 

உடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் குணமும் இவற்றுக்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரையை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டு மருத்துவரின் யோசனைப்படி அளவோடு சாப்பிடலாம்.

It is better to eat fruits with skin, they say. Especially the skin of fruits such as sapota, mango, grape, guava, apple, satikudi has high fiber content.

It is best to eat them with the skin on. The fiber is lost when the fruit is squeezed, strained and only the juice is consumed. Apple skin is rich in calcium, potassium, vitamins A, C and fiber. These nutrients are essential for heart patients and diabetics. It also contains anti-oxidants that we need.

It has anti-cancer properties. Therefore, these nutrients can be obtained only if the apple is eaten with the skin on. And the blood sugar level does not increase immediately. When apple juice is consumed, the above nutrients are not available and the blood sugar rises immediately.

  Guava peel contains many skin-protecting vitamins. Dryness of the skin is prevented for those who eat it regularly. Mango peel has cholesterol lowering properties. The skin of the sapota fruit is full of chemicals that heal wounds in the body quickly.

They also have the ability to destroy harmful bacteria in the body. Diabetics can control their blood sugar well and eat in moderation as advised by the doctor.

No comments:

Post a Comment