தினம் ஒரு தகவல் :கார் பார்க்கிங் | Daily information: Car parking - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 12 يونيو 2023

தினம் ஒரு தகவல் :கார் பார்க்கிங் | Daily information: Car parking

தினம் ஒரு தகவல் :கார் பார்க்கிங்

பல்வேறு சவுகரியங்களை கருத்தில் கொண்டு வங்கியில் கடன் வாங்கி கார் வாங்கியவர்கள் நொந்து கொள்ளும் ஒரே விஷயம் குடும்பத்தினருடன் கடைகளுக்கு சென்று நிம்மதியாக பொருள்களை வாங்க முடியாததுதான். காரை நிறுத்த உரிய இடத்தைத் தேடி அலைவதே பெரும் பிரச்சினையாக இருப்பதுதான் இதற்குக் காரணம். சென்னை போன்ற நகரங்களில் இந்த பிரச்சினை ஓரளவு சமாளிக்கும்படி இருந்தாலும் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் உரிய பார்க்கிங் வசதி இல்லையெனில் அந்தப் பகுதிகளுக்கு காரில் செல்லவே பலரும் தயங்குகின்றனர். 

இதுபோன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாது போனால் வாடகைக் காரில் செல்லும் குடும்பத்தினரும் உண்டு. காரை நிறுத்த உரிய இடம் தேடி குறைந்தது 5 கி.மீ. தூரமாவது பயணிக்க வேண்டிய நிலை இப்போது உள்ளது. இதற்கு இப்போது தீர்வு கண்டுள்ளது பாஷ். ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்தநிறுவனம் அல்ட்ரா சோனிக் அதிர்வலைகளில் செயல்படக் கூடிய கருவியை உருவாக்கியுள்ளது. இக்கருவி கார் நிறுத்துமிடங்களில் எந்தெந்த இடங்களில் இடம் காலியாக உள்ளது என்று துல்லியமாக காட்டும். 

அத்துடன் கார் எவ்வித ஸ்கிராட்ச் இல்லாமல் நிறுத்தவும், திரும்ப எடுக்கவும் வழிகாட்டுகிறது. கார்களில் ஏற்படும் உராய்வுகள் மற்றும் ஸ்கிராட்சுகளில் 30 சதவீத அளவுக்கு பார்க் செய்யும்போது உருவாகிறது. இதிலும் பல சமயங்களில் காரின் வெளிப் பாகங்கள் சேதமடையும் நிகழ்வுகளும் ஏற்பட்டு விடுகின்றன. இவற்றை தவிர்க்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பாஷ் உருவாக்கியுள்ளது. தானியங்கி பார்க்கிங் தொழில் நுட்ப கருவியை உருவாக்க பாஷ் பொறியாளர்கள் சுமார் 5 ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்ளனர். இந்த கருவி இருப்பதால் கார்களை நிறுத்த இடம் தேடி அலைய வேண்டியிருக்காது. 

இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். காரை எந்த இடத்தில் நிறுத்தினோம் என்று தேடி அலைவதும் குறையும். இந்த தானியங்கி பார்க்கிங் கருவி ஜெர்மனியில் அதிகம் விற்பனையாகிறது. ஜெர்மனியில் புதிதாக தயாராகும் கார்களில் பாதிக்கு மேல் இதுபோன்ற தானியங்கி பார்க்கிங் வசதி கொண்ட தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் காலியாக உள்ள இடத்தை காண்பிப்பதோடு அங்கு எவ்வித உரசலும் இன்றி காரை நிறுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. இந்தத் தொழில் நுட்பம் கொண்ட கார்களை நிறுத்துமிட வாயிலில் நிறுத்தி டிரைவர் இறங்கிக் கொண்டாலே போதும். மொபைலில் உள்ள ஆப்ஸ் மூலம் கார் தானாக இயங்கி காலியான இடத்தில் நின்றுவிடும். 

பிறகு வெளியில் வரும்போது ஸ்மார்ட்போன் மூலம் இயக்கினால் நாம் இருக்குமிடத்துக்கு கார் வந்துவிடும். இதனால் காரை நிறுத்த இடம் தேடி அலைவதோ பிறகு பார்க் செய்த இடத்தை மறந்து தேடிச் செல்வதோ இருக்காது. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் கார் நிறுத்துமிட வசதி உள்ள பொது உபயோக பகுதிகளில் காலியாக உள்ள இடத்தைக் கண்டறிவதால் இந்த கருவி பொறுத்தப்பட்ட கார்கள் தயாரிப்பு இப்போது அதிகரித்துள்ளது.

Daily information: Car parking

Considering the various amenities, the only thing that bothers people who have taken a loan from the bank and bought a car is not being able to go to the shops with their family and buy things in peace. The reason for this is that wandering around in search of a suitable place to park the car is a major problem. Although this problem can be overcome to some extent in cities like Chennai, in cities like Delhi, Mumbai, Bengaluru and Kolkata, many people hesitate to drive to those areas if there is no adequate parking facility.

There are also families who go by rental car if it is unavoidable to go to such areas. At least 5 km to find a suitable place to park the car. There is now a long way to go. Bash has now solved this. A leading manufacturer of automobile spare parts, this company has developed a device that can operate on ultra sonic vibrations. This tool will show you exactly where the parking spaces are vacant.

It also guides the car to stop and take off without any scratch. About 30 percent of scratches and scuffs on cars come from parking. In many cases, the external parts of the car are damaged. Bash has developed a new technique to avoid this. Bosch engineers have spent around 5,000 hours developing the automated parking technology. With this tool, there is no need to wander around looking for parking spaces.

This saves fuel cost. Wandering around looking for where we parked the car will also be reduced. This automatic parking device is the best seller in Germany. More than half of all new cars in Germany are equipped with this kind of automatic parking technology. This technology enables the car to park without friction by displaying an empty space at the push of a button. All you have to do is park the cars with this technology at the parking gate and the driver gets off. The car will automatically park itself in an empty space through an app on the phone.

Then when we come out, if we operate it through the smartphone, the car will come to our place. This way you will not have to wander around looking for a place to park your car or forget the place you have parked. Production of these equipped cars has now increased as they find vacant space in theaters, shopping malls and public utility areas with parking facilities.

Daily Update: Car Parking Made Easy

One of the capital apropos for individuals who accept taken out a car accommodation from a coffer and purchased a agent is the aggravation of award a acceptable parking atom back activity arcade with their families. This chase for parking spaces has become a cogent problem, decidedly in cities like Delhi, Mumbai, Bengaluru, and Kolkata, area abounding bodies alternate to drive due to the abridgement of able parking facilities.

In such areas, some families opt for rental cars back visiting, constant the altercation of award a parking atom that can be as far as 5 kilometers away. However, there is now a band-aid to this issue. Bosch, a arch architect of auto additional parts, has developed a cutting-edge accessory that utilizes accelerated vibrations. This accessory absolutely identifies abandoned parking spaces, authoritative it easier for drivers to locate acceptable spots.

Moreover, the accessory provides advice to esplanade and abandon after any scratches. Approximately 30 percent of car scratches and scuffs action during parking, generally consistent in accident to the vehicle's exterior. Bosch has auspiciously tackled this botheration by employing a new technique. Their engineers accept committed about 5,000 hours to developing automated parking technology. With this device, drivers no best charge to aimlessly chase for parking spaces.

This addition not alone saves ammunition costs but additionally reduces the time spent analytic for a anchored vehicle. In fact, the automated parking accessory has become a top agent in Germany, with over bisected of all new cars able with this technology. By artlessly acute a button, the arrangement displays accessible parking spaces, acceptance the car to esplanade itself seamlessly after any friction. Once the disciplinarian alcove the parking aboideau and exits the vehicle, they can use a smartphone app to actuate the automated parking feature.

Upon returning, the disciplinarian can arouse the car to their area application the smartphone app. This acceptable adjustment eliminates the charge to chase for a parking atom or anguish about apathy the vehicle's location. As a result, car manufacturers accept added assembly of cartage able with this technology, award abandoned spaces in theaters, arcade malls, and added accessible areas with parking facilities.







ليست هناك تعليقات:

إرسال تعليق