அச்சுறுத்தும் முதுகுவலி Threatening back pain - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 5 يونيو 2023

அச்சுறுத்தும் முதுகுவலி Threatening back pain

உட்காரும்போது முதுகு வளைந்த நிலை–யில் இருக்கக்கூடாது

முதுகுவலி எல்லா வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகிவிட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் முதுகுவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், மன அழுத்தமும் முக்கியகாரணம். வயது அதிகரிக்கும்போது முதுகுவலியின் வீரியம் அதிகரிக்கும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
முதுகுவலியை தவிர்க்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை முதுகை நேர் நிலையில் வைத்தபடி நின்று கை, கால்களை நீட்டி எளிய பயிற்சிகளை செய்யலாம். இடுப்புக்கு வலிமை சேர்க்கும் பயிற்சிகளை மேற்கொள்வதும் முதுகுவலியை தடுக்க உதவும். 2050-ம் ஆண்டுவாக்கில் உலக அளவில் 80 கோடி பேர் முதுகுவலி பாதிப்புக்கு ஆளானவர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இது 2020-ம் ஆண்டை ஒப்பிடும்போது 36 சதவீதம் அதிகரிக்கும். முதுகுவலியை தடுக்க மேற்கொள்ளவேண்டிய சில விஷயங்கள்.. 

 உடல் தோரணையை நேரான நிலையில் வைத்திருக்க பழக வேண்டும். 

உடல் பருமனாக இருந்தால் உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். 

நாள்பட்ட முதுகுவலி இருந்தால் கனமான பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும். * தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். முதுகுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் நிலையில் படுக்கக்கூடாது. 
 மன அழுத்தத்தை கட்டுப்படுத்த பழக வேண்டும். 

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டி இருந்தால் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடமாட வேண்டும்.

Back pain has become a common problem faced by people of all ages. While there are many causes of back pain in today's digital age, sitting for long periods of time and stress are the main causes. Studies have confirmed that the severity of back pain increases with age.

To avoid back pain you can do simple exercises by standing with your back straight and stretching your arms and legs every two hours. Doing hip strengthening exercises can also help prevent back pain. A study says that by 2050, 800 million people worldwide will suffer from back pain. This will increase by 36 percent compared to 2020. Some things to do to prevent back pain..
Practice maintaining a straight body posture.

If you are obese, you should try to lose weight.

Avoid lifting heavy objects if you have chronic back pain. * Sleep for 7-8 hours daily. Do not lie in a position that causes discomfort to the back.

  Learn to manage stress.

If you have to sit in one place for a long time, you should get up from time to time and move around for a while.

ليست هناك تعليقات:

إرسال تعليق