பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 12இல் கட்டுரை, பேச்சுப் போட்டி - துளிர்கல்வி

Latest

Search This Site

السبت، 8 يوليو 2023

பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 12இல் கட்டுரை, பேச்சுப் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 12இல் கட்டுரை, பேச்சுப் போட்டி 


தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச் சித் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச் சுப் போட்டிகள் புதன்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளதாவது: மாநிலத்துக்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி, தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ராஜ வீதியில் உள்ள அரசு மகளிர் ஆசி ரியர் பயிற்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் ஜூலை 12ஆம் தேதி (புதன்கி ழமை) காலை 10 மணி முதல் நடத்தப்பட உள்ளன. 

இப்போட்டிகளில், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன் றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. போட்டிகள் நடத்தப் பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق