யோகா, இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் ஆகஸ்டு 14-ந் தேதி கடைசி நாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, July 30, 2023

யோகா, இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் ஆகஸ்டு 14-ந் தேதி கடைசி நாள்

2023-24-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில், ‘பி.என்.ஒய்.எஸ்.' என்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

இன்று (30-ந் தேதி) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘செயலாளர், தேர்வு குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600106' என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் தபால், கூரியர் சேவை வாயிலாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.


No comments:

Post a Comment