பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? கல்வித்துறை அதிகாரி விளக்கம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 15, 2023

பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? கல்வித்துறை அதிகாரி விளக்கம்

பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? கல்வித்துறை அதிகாரி விளக்கம் 


பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவும் வெளியிடப்பட்டு விட்டது. மாணவர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கொண்டு உயர்கல்வியில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும், பெற்றோரும் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை அதுபற்றிய எந்த தகவலையும் அரசு தேர்வுத் துறை வெளியிடவில்லை. 

 பொதுவாக பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட ஒரு மாத இடைவெளிக்குள் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும். இந்த ஆண்டு அதுபோல் இல்லாமல், அதனை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை அச்சிட்டு வழங்குவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? என்ற கேள்வி பெரும்பாலான பெற்றோர், கல்வியாளர்களின் மனதில் இருந்து வருகிறது. 

 இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு, அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? என்று கேட்டபோது, ‘அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும்' என்றார்.

No comments:

Post a Comment