தமிழ்நாட்டில் 4¾ லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க திட்டம்! பயிற்சியின் இறுதியில் மதிப்பீட்டுத் தேர்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 7, 2023

தமிழ்நாட்டில் 4¾ லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க திட்டம்! பயிற்சியின் இறுதியில் மதிப்பீட்டுத் தேர்வு

தமிழ்நாட்டில் 4¾ லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க திட்டம் நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு கற்று கொடுப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்' கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 5 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் (2023-24) தமிழ்நாட்டில் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்க கல்வித் துறை திட்டமிட்டு இருக்கிறது. 

அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை 6 மாதங்களுக்கு இந்த பயிற்சியை செயல்படுத்த வேண்டும் என்றும், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வீதம் 6 மாதங்களுக்கு 200 மணி நேரம் தன்னார்வலர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கற்போருக்கு பயிற்சியின் இறுதியில் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

No comments:

Post a Comment