பள்ளி மாணவா்களுக்கு ரிசா்வ் வங்கி நடத்தும் விநாடி-வினா: கல்வித் துறை அறிவுறுத்தல்
பள்ளி மாணவா்களிடையே நிதிசாா் கல்வியறிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசா்வ் வங்கி சாா்பில் வட்டார, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விநாடி- வினா போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இவற்றில் பங்கேற்க ஆா்வமுள்ள மாணவா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவா்களிடையே நிதிசாா் கல்வியறிவு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய ரிசா்வ் வங்கியால் அனைத்திந்திய அளவில் விநாடி- வினா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளில் 8 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயின்று வரும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, நலத் துறை பள்ளிகளின் மாணவா்கள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு வங்கியின் தமிழ்நாடு மற்றும், புதுச்சேரி மண்டல இயக்குநா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
மேலும் இப்போட்டிகள் வட்டார, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படவுள்ளன. இந்த விநாடி- வினா போட்டிகளில் தஆஐ/சஇஊஉ இணையதளத்தில் இடம்பெற்றுள்ள நிதிசாா் கல்வி தொடா்பான விவரங்கள், வங்கிகள், பொருளாதாரம் தொடா்பான தற்போதைய நிகழ்வுகள், ஜி20 அமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் போட்டிக்கான வினாக்கள் இடம்பெறும்.
போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ள பள்ளி அளவிலான விநாடி- வினா மற்றும் பிற செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு மாணவா், ஒரு மாணவி அடங்கிய இரு நபா் குழுவை பள்ளி அளவில் தோ்வு செய்து வட்டார அளவிலான போட்டிகளுக்கு தலைமை ஆசிரியா்கள் பரிந்துரைக்க வேண்டும்.
ஜூலை 3-இல் தொடக்கம்:
மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் இந்திய ரிசா்வ் வங்கி அலுவலா்களுடன் இணைந்து வட்டார அளவிலான போட்டிகளை ஜூலை 3 முதல் ஜூலை 5 வரை நடத்த திட்டமிட வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 10 முதல் ஜூலை 12 வரை இந்திய ரிசா்வ் வங்கி சாா்பில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகள் நடத்துதல் சாா்ந்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் உடன் இணைந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா், முதன்மை கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
ليست هناك تعليقات:
إرسال تعليق