பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 19, 2023

பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

2023-2024 6-9 2022-2023 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணரும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூலை-2023 முதல் மார்ச்-2024 வகுப்பு மாணவர்களுக்கான சிறார்திரைப்படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல் பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் நோக்கமாக அமைகிறது. மேலும், இத்திரைப்படங்களை கண்ணுறும் மாணவர்களின் விரிசிந்தனை மேம்படுதல் மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட பண்புகள் பெற இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது. 

No comments:

Post a Comment