தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 26, 2023

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளது. 

திடீர் விடுப்பு 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தப்படுகிறார்கள். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகங்களை தவிர கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களில் தலைமை அலுவலகம் நிர்ணயித்துள்ள அளவிலான பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்போது, அதிக அளவில் டிரைவர் மற்றும் கண்டக்டர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இருப்பினும், டிரைவர் அல்லது கண்டக்டர் திடீர் விடுப்பு எடுக்கும் போது, உடன் பணியாற்றுபவர்கள் விடுப்பில் சென்றவருக்கான பணியை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, இனிமேல் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலைகளை தெரிந்த ஒருவரை பணியில் அமர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 812 பணியிடங்கள் 

அதன்படி, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் அரசு போக்குவரத்துத் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 291 பணியிடங்களில் 60 சதவீதமான 174 பணியிடங்களும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 423 பணியிடங்களில் 60 சதவீதமான 254 பணியிடங்களும், கோவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 60 பணியிடங்களில் 100 சதவீதம் என 60 பணியிடங்களையும் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணி தெரிந்த நபர்களால் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 272 பணியிடங்களில் 50 சதவீதமாகிய 136 பணியிடங்களையும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 376 இடங்களில் 50 சதவீதமான 188 பணியிடங்களையும் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணி தெரிந்த நபர்களால் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தத்தில் 812 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.17 ஆயிரத்து 700 முதல் அதிகபட்சமாக ரூ.56 ஆயிரத்து 200 வரை வழங்கப்படும். 

தகுதிகள் 

இதற்கான கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழில் எழுதப் படிக்க தெரிந்து இருக்க வேண்டும். தொழில்நுட்ப தகுதியாக குறைந்தது கனரக ஓட்டுனர் உரிமம் (18 மாதம் கனரக ஓட்டுனர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்) மற்றும் கண்டக்டர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதிகளாக தமிழ்நாட்டிற்குள் வாகனங்கள் ஓட்டுவதற்கான பேட்ஜ் உரிமம், தமிழக அரசால் வழங்கப்படும் முதல் உதவி கல்விக்கான (அடிப்படை பாடத்திட்டம்) சான்றிதழ்கள், உயரம் குறைந்தபட்சம் 160 சென்டி மீட்டர், குறைந்தபட்சம் 50 கிலோ எடை, தெளிவான கண்பார்வை மற்றும் எவ்வித உடற்குறைபாடும் இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட மேலாண் இயக்குனர்கள் மேற்கண்ட தகுதிகளுடைய நபர்களை தேர்வு செய்து காலி பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இங்கே கிளிக் செய்து படிக்கவும்

No comments:

Post a Comment