டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, July 17, 2023

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 

25 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 60 டிப்ளமோ நர்சிங் படிப்புக்கும், 24 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 720 பார்ம் டி படிப்புக்கும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

இதில் பார்ம் டி படிப்பில் 448 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, இந்த படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் வாயிலாக இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment