பூந்தமல்லி பார்வைத்திறன் குன்றியோர்
அரசுப் பள்ளியில் சேர்க்கை
பூந்தமல்லியில் உள்ள பார்வைத்
திறன் குன்றியோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில்
மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன்பெறலாம் என ஆட்சி
யர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பார்வைத்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகள் நலனுக்
காக பூந்தமல்லியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வரு
கிறது. இப்பள்ளியில் நிகழாண்டுக்கான மாணவ, மாணவி
கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இங்கு தரமான உணவுடன் கூடிய விடுதி வசதி, கல்வி உத
வித்தொகை மற்றும் சீருடைகள் ஆண்டுதோறும் வழங்கப்
படுகின்றன.
அதேபோல் மாணவர்களுக்கு பாடங்களை மின்னணு
முறையில் பதிவு செய்து காதால் கேட்டு பயில உதவி செய்வ
துடன் தேர்வின்போது 'சொல்வதைஎழுதும்' தேர்வு உதவி
யாளர்கள் வசதியும் செய்து கொடுக்கப்படும்.
முற்றிலும் பாதுகாக்கப்பட்ட சிசிடிவி கேமரா பொருத்
தப்பட்ட பள்ளி வளாகமாகவும், தூய்மையான காற்று,
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் செயல்படுகிறது.
அதனால் இப்பள்ளியில் பார்வைத்திறன் குறையுடைய
மாணவ, மாணவிகள் சேர்ந்து பயிலவும், இதர பயிற்சி
களை முற்றிலுமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
ஆட்சியர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق