அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 12, 2023

அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! 
பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் இயக்குநரின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி செயல்முறைக்கிணங்க அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு / துறை மாறுதல் மூலம் தொடக்கக் கல்வி துறை, மாநகரட்சி, கள்ளர் சீரமைப்புத் துறை, ஆதிதிராவிட நலத் துறை மற்றும் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல அத்துறையின் (ப.க.து) தலைவரால் (இயக்குநர்) உரிய தடையின்மைச் சான்று பெறுதல் அவசியமாகிறது. மேற்படி அலகுவிட்டு அலகு /துறை மாறுதலில் செல்வதற்கு தடையின்மைச் சான்று (Noc) கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து கீழ்க்காணும் ஆவண்களை கருத்துருவில் இணைத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment