தமிழ் மொழி கற்போம் புதிய திட்டம் குறித்த மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்
பார்வையில் காணும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின்
அறிவிப்பின்படி, வேலைவாய்ப்பின் காரணமாக தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வரும் பிற
மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள். தங்களின் தாய்மொழியுடன் தங்கு தடையின்றி
தமிழில் பேசவும், எழுதவும் "தமிழ்மொழி கற்போம்" என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, முன்னோடித் திட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் பிற மொழியை
தாய்மொழியாக கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இடைநின்ற
மாணவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிறப்பு மையம் தொடங்கப்படவுள்ளது.
அதன்படி, பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களின்
குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையம் தொடங்குவதற்காக தங்கள் மாவட்டம் சார்ந்து
இணைப்பிலுள்ளவாறு கருத்துரு கோரப்படுகிறது. மாவட்டங்களிலிருந்து அனுப்பப்படும்
கருத்துருக்கள் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் 05.07.2023-க்குள்
அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு : படிவம்
ليست هناك تعليقات:
إرسال تعليق