இக்னோ பல்கலைக்கழகத்தில்
மாணவர் சேர்க்கை தேதி நீடிப்பு
இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜூலை-2023
பருவத்துக்கு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31 -
ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இக்னோவின் மண்டல இயக்குநர் திங்கள்கிழமை
வெளியிட்ட அறிக்கை : தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழு
வினரால் (NAAC) A++ தர அங்கீகாரம் பெற்ற இந்திய அரசின் கல்வி
துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்
கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றி
தழ் படிப்புகளுக்கு ஜூலை-2023 பருவத்திற்கான மாணவர் சேர்க்
கைக்கான கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்
டுள்ளது.
இப்படிப்புகளில்சேர விரும்புவோர் https://ignouadmission.
amarth.edu.in (for ODL Mode Programmes)
https:
//iop.ignouonline.ac.in (for Online Mode Prorgrammes) என்ற
இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். பிஏ (ஜெனரல்),
பி. காம் (ஜெனரல்), பிஎஸ்சி (ஜெனரல்) ஆகிய படிப்புகளுக்கு விண்
ணப்பிக்கும் தகுதியுடைய பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு
கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இணையதளம்: www.ignou.a
c.in மின்னஞ்சல்: rcchennai@ignou.ac.in and rcchennai
admissions@ignou.ac.in மற்றும் 044-26618040 தொலைபேசி
எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment