23-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 430 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, கலந்தாய்வு இன்று (சனிக்கிழமை) தொடங்க இருக்கிறது.
முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப்பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.
இதில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு இன்று தொடங்கி நடக்க இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவில் வரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் 27-ந்தேதி வரை (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment