கபத்தை நீக்கும் கற்பூரவல்லி - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, July 17, 2023

கபத்தை நீக்கும் கற்பூரவல்லி

கபத்தை நீக்கும் கற்பூரவல்லி 

 மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி. மழையும், வெயிலும் மாறி மாறி தோன்றும் பருவகாலத்தில் சளி, இருமல், தொண்டையில் கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வாக இருப்பது கற்பூரவல்லி. இது கொடுக்கக்கூடிய மருத்துவப் பலன்கள் ஏராளம். வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகைப் பொருட்களில் கற்பூரவல்லியும் ஒன்று. 
 மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி. இதன் இலை வெல்வெட் போன்று மிருதுவாகவும், நீர்ச்சத்து நிறைந்தும், தடிமனாகவும் காணப்படும். அரை அடி நீளமுள்ள, கனமான தண்டை நட்டு வைத்தாலே கற்பூரவல்லி எளிதாக வளர்ந்துவிடும். 
இதற்கு நேரடி சூரிய வெளிச்சம், குறைவான தண்ணீர், சாதாரண தோட்ட மண்ணே போதுமானது. கற்பூரவல்லி இலையை சாதாரணமாக அப்படியே மென்று சாப்பிடலாம். இந்த இலையுடன் கல் உப்பு சேர்த்து கசக்கி சாறு பிழிந்து குடிக்கலாம். தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கியும் பருகலாம். வீட்டுத் தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களையும், அதைச் சுற்றி ரீங்காரமிடும் தேனீ, பட்டுப்பூச்சிகளையும் பார்ப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். 
இந்த சூழலை உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் உண்டாக்கலாம். சூரியகாந்தி, டேலியா, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செம்பருத்தி, உன்னி செடி, நீல சம்பங்கி, பவளமல்லி, சிறுபுனைக்காலி, காசி தும்பை, அரளி, துலுக்க செவ்வந்தி, நீல முல்லி, பன்னீர் பூ, சீமையல்லி மற்றும் லாவண்டர் செடிகளை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். இவற்றின் மணமும், இதில் உருவாகும் தேனும், தேனீ மற்றும் பட்டுப்பூச்சியை ஈர்க்கும் தன்மை கொண்டவை.


Camphor to remove Kapha Our forefathers used to grow medicinal camphor along with tulsi. From children to adults, camphor has the power to remove kapha from the body. Cold, cough, throat infection etc. will occur during the season of alternating rain and sun. 

The best remedy for all these is camphor. It has many medicinal benefits. Camphor is one of the easiest herbs to grow at home. Our forefathers used to grow medicinal camphor along with tulsi. From children to adults, camphor has the power to remove kapha from the body. Its leaves are smooth like velvet, juicy and thick. Camphor will grow easily by planting a half-foot-long, heavy stem. All it needs is direct sunlight, less water, and normal garden soil. 

Camphor leaves can be chewed normally. Mix this leaf with rock salt and squeeze the juice and drink it. Boil it in water and drink it as a decoction. Seeing flowers blooming in the home garden and bees and silkworms swarming around it brings joy to the heart. You can create this environment in your home garden as well. 

Sunflower, dahlia, sambangi, marigold, rose, sambaruthi, unni plant, neela sambangi, pavalmalli, sirupunaikali, kasi thumbai, arli, tuluka sevvanthi, neela mulli, panneer pho, chimaiyalli and lavender plants can be grown in the home garden. Their fragrance and the honey they produce are attractive to bees and silkworms.

No comments:

Post a Comment