என்ஜினீயரிங், பி.டெக்., எல்.எல்.பி., பி.காம் படித்தவர்களுக்கு விமான நிறுவனத்தில் வேலை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 29, 2023

என்ஜினீயரிங், பி.டெக்., எல்.எல்.பி., பி.காம் படித்தவர்களுக்கு விமான நிறுவனத்தில் வேலை

என்ஜினீயரிங், பி.டெக்., எல்.எல்.பி., பி.காம் படித்தவர்களுக்கு விமான நிறுவனத்தில் வேலை 

இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) சார்பில் ஜூனியர் உதவியாளர், சீனியர் உதவியாளர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணிப்பிரிவுகளில் 342 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், பி.டெக்., எல்.எல்.பி., பி.காம் என பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
சில பதவிகளுக்கு பணி அனுபவமும் கோரப்பட்டிருக்கிறது. 4-9-2023 அன்றைய தேதிப்படி 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஜூனியர் உதவியாளர் பதவிக்கு மட்டும் 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. ஆன்லைன் தேர்வு, அடிப்படை கணினி பயிற்சி, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 5-8-2023 முதல் 4-9-2023 வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை www.aai.aero/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment