அத்துடன் பள்ளி, கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சார்ந்த கல்வி பயின்றவர்களாகவோ, கணினி சார்ந்த கல்லூரி படிப்பு படித்தவர்களாகவோ, டிப்ளமோ படித்து சான்றிதழ் பெற்றவர்களாகவோ இருக்க வேண்டும்.
பணிபுரியும் மாநிலத்தின் மொழியை பேச, எழுத, படிக்க தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருந்தால் 21-7-2023-க் குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். 1-7-2023 அன்றைய தேதிப்படி 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதாவது 2-7-1995-க்கு முன்போ, 1-7-2003-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
ஆன்லைன் வழியே முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-7-2023.
விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.ibps.in/crp-rrb-xii என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق