தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 28, 2023

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி 


 தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். முன்னாள் ராணுவ வீரர் நாகை அருகே நாகூரில் வசிக்கும் 107 வயது முன்னாள் ராணுவ வீரரான கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு ஓய்வூதியத்துக்கான வாழ்நாள் சான்று வழங்குவதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது கோபாலகிருஷ்ணனிடம் நலம் விசாரித்த அமைச்சர், அவருக்கு சால்வை அணிவித்து மக்களை தேடி மருத்துவத்துக்கான பெட்டகத்தினையும், வாழ்நாள் சான்றிதழையும் வழங்கினார். வாழ்நாள் சான்றிதழ் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழ்நாட்டில் 100 வயதுக்கு மேல் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று கருவூலத்துறை அதிகாரிகள் வாழ்நாள் சான்றிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் அதிக வயதுடையவரான 107 வயது கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு கருவூலத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரடியாக வந்து சான்றிதழை வழங்கி உள்ளோம். 1916-ம் ஆண்டு பிறந்த கோபாலகிருஷ்ணன் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது ராணுவத்தில் மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றினார். தொடர்ந்து சுங்கத்துறையிலும், போலீஸ் துறையிலும் பணியாற்றி 1972-ம் ஆண்டு ஓய்வு பெற்று அரசின் ஓய்வூதியத்தை பெற்று வருகிறார். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். தமிழ் மொழியை யாராலும் எந்த நேரத்திலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment