குழந்தையின் மவுனம் A child's silence
மற்றவர்களால் மிரட்டப்படும் குழந்தைகளும் ஏதாவது ஒரு வகையில் மனரீதியில் காயப்படுத்தப்பட்ட குழந்தைகளும் மற்றவர்கள் தங்களைக் கவனித்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். இதனாலேயே தாங்கள் இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் மவுனம் காக்கின்றன பல குழந்தைகள். ஏதோ ஒன்றை கற்றுக்கொள்வதில் உள்ள இன்னல் காரணமாகவே பேசாமல் இருக்கக் கூடும். எனவே, அதிகம் பேசும் குழந்தைகளை பேச விட்டுக் கேட்பதைவிட பேசாத குழந்தைகளிடம்தான் அதிகம் பேச வேண்டும்.
அதுவும் பரிவோடு. மகிழ்ச்சியாக இருக்கிறாயா, எதைப் பார்த்தாவது அஞ்சுகிறாயா, ஏதாவது தேவையா என்றெல்லாம் கேட்டு அந்த குழந்தையின் மவுனத்துக்கும் ஒதுங்கலுக்கும் காரணம் என்ன என்று அறிந்துகொள்ளலாம். அதிகம் பேசாமல் மவுனமாக இருப்பதும் மனிதர்களின் இயல்பான சுபாவம்தான்.
அமெரிக்காவின் தேசிய மனநல மருத்துவ கழகத்தின் மூத்த மருத்துவ நிபுணர் கேதலின் மெரிகங்காஸும், அவருடைய சகாக்களும் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவற்றைப் பதிவுசெய்தனர். அவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என்றே தெரிவித்தனர். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்று கூறி, பட்பட்டென்று பதில் சொல்லும் குழந்தைகளையே புத்திசாலிகள் என்று புகழும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் முதல் குழந்தையைப் போலவே அடுத்த குழந்தையின் சுபாவங்கள் இருப்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சிகளை ஆராய்வதுதான் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் சவாலாக இருக்கிறது. மவுனமாக இருப்பது அல்லது ஒதுங்கி இருப்பது என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு கட்டம்தான்.
தனக்குப் புதிதான அல்லது மனதளவில் ஏற்க முடியாத புதிய சூழலில் குழந்தை பெரும்பாலும் மவுனமாக இருக்கிறது. பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும் குழந்தையிடம் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தால் பெற்றோர்தான் அதை விசாரித்து, தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும். காது கேளாமை, கரும்பலகையில் எழுதியிருப்பதைப் பார்ப்பதில் உள்ள கோளாறு, பாடம் சொல்லித்தரும் விதம் சரியில்லாததால் புரிந்துகொள்ள முடியாமை என்று பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்பதால் குழந்தையிடம்தான் குறை என்ற அவசர முடிவுக்கு வந்து குழந்தையைத் திட்டுவதோ தண்டிப்பதோ கூடாது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளின் மவுனமே, உதவிக்காக ஓங்கி ஓலிக்கும் குரல்தான் என்பதைப் புரி்ந்துகொள்ள வேண்டும். சாதாரணமாகக் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் என்று கூறப்பட்டாலும் அந்தக் கூச்சம் இயல்பானதுதானா அல்லது சமூகத்தைப் பார்த்து அவர்களோடு சேர முடியாமல் போனதால் ஏற்பட்டதா என்பதைப் பிரித்து அறிய வேண்டும். கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை இன்னொரு குழந்தையோடு சேர்த்து பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்று பழக்கலாம். அமைதியான, சாதுவான அந்த குழந்தைகளை பக்கத்தில் அமர்த்தி சாதுவான குழந்தைக்கு ஆசிரியர்கள் நம்பிக்கை ஊட்டலாம். இதில் செய்யக் கூடாதது எதுவென்றால், கூச்சப்படாதே, அமைதியாக இருக்காதே என்று அறிவுரை கூறுவதுதான்.
A child's silence
Children who are bullied by others and children who have been traumatized in some way are wary of being noticed by others. This is why many children keep silent and do not show their presence. Difficulty learning something may be the reason for not speaking. Therefore, rather than asking talkative children to talk, talk more to non-talkative children.
That too with compassion. You can find out what is the reason for the child's silence and aloofness by asking him if he is happy, if he is afraid of something, or if he needs something. Being silent without talking too much is also the natural nature of human beings. Kathleen Merikangas, a senior clinician at the US National Psychiatric Association, and her colleagues surveyed more than 10,000 children between the ages of 13 and 18 and recorded them. More than half of the children said they were shy.
Many people have a habit of praising children who answer quickly and say that only the quiet child will survive.
The next child in a family does not have the same temperament as the first child. Exploring children's emotions is a challenge for pediatricians and psychologists. Being quiet or withdrawn is a stage in a child's development.
The child is often silent in a new or mentally unacceptable environment. If the child continues to be afraid and nervous even after a month of starting school, the parents should investigate and provide the necessary help.
Psychologists say that the child should not be scolded or punished because there may be various reasons such as deafness, difficulty in seeing what is written on the blackboard, inability to understand due to the wrong way of teaching.
It should be understood that children's silence is a cry for help. Even if it is said that children are normally shy, it is necessary to distinguish whether that shyness is normal or because they are not able to join the society. A shy child can be taken to school with another child and get used to it. Teachers can reassure the meek child by placing quiet, meek children on the sidelines. What not to do is to advise them not to be shy or to be quiet.
No comments:
Post a Comment