இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்களா?
இரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் தூக்கம் வரும் வரை சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட முயற்சி செய்வது அவர்களின் தூக்கத்திற்கு தடையாகவும் மாறிவிடுகிறது.
ஒருவழியாக தூக்கத்தில் ஆழ்ந்தாலும் தலையணைக்கு பதிலாக ஸ்மார்ட்போனை அணைத்துக்கொள்பவர்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஒருசிலர் மார்பில் வைத்துக்கொண்டும், தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டும் தூங்குகிறார்கள். இது நல்ல பழக்கம் அல்ல.
தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய்உருவாகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளி கண்களில் உள்ள ரெட்டினாவை சேதப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதனால் இரவு நேரங்களில் செல்போனில் வெளிப்படும் நீல நிற ஒளியின் அளவை குறைத்து வைப்பது அவசியமானது. இந்த நீல ஒளி உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களுக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். இரவு தூக்கம் தடைபடுவதால் சோர்வு மட்டுமல்ல இதய நோய், எடை அதிகரிப்பு, மன அழுத்தம், பதற்றம் உள்பட பல வகையான சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இரவு நேரத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது குழந்தைகள், டீன் ஏஜ் வயதினரின் மனநலத்தை பாதிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கிரிப்த் பல்கலைக்கழகமும், முர்டேக் பல்கலைக்கழகமும் இணைந்து 29 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8 முதல் 11 வயது நிரம்பிய 1100 மாணவ-மாணவிகளிடம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் இரவு நேரத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்கள் தூக்கமின்மை மற்றும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Many people use smartphones at night to overcome sleeplessness. They make an effort to spend time on social media platforms until sleep arrives, which actually disrupts their sleep patterns.
Despite the fact that using smartphones can provide temporary relief from insomnia, it is not a healthy practice. Some people use their phones in bed or even place them next to their heads while sleeping. This is not beneficial.
Research has shown that using smartphones near or around the bed during sleep can be harmful. Emitting radiation from phones can affect the brain, causing disturbances. It can also increase the risk of certain diseases, including eye problems.
The blue light emitted by smartphones can suppress melatonin, a hormone that regulates sleep, leading to sleep disturbances. It not only affects sleep but also contributes to various health issues such as heart problems, weight gain, mental health disorders, and fatigue.
Using smartphones at night has been found to affect children's and teenagers' mental well-being in research studies.
A joint study conducted by the University of Crypt and Murtech University, which involved 29 schools and 1,100 students aged 8 to 11, concluded that smartphone usage during nighttime impacts sleep quality and mental health. The study has confirmed that students who use smartphones at night are more prone to sleep disturbances and mental health problems.
Therefore, based on the findings of the study, it has been strongly recommended that students using smartphones at night should be monitored and guided regarding the risks associated with sleep disturbances and mental health issues.
ليست هناك تعليقات:
إرسال تعليق