கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிலை II லிருந்து நிலை I ஆக தரமுயர்த்துதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, July 18, 2023

கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிலை II லிருந்து நிலை I ஆக தரமுயர்த்துதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பார்வை 1-ல் காணும் அரசாணையின் மூலம் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 2689 கணினி பயிற்றுநர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள 814 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களாக நியமிக்கப்பட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 
மேலும், கணினி பயிற்றுநராக பணிபுரிபவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பணியிடங்கள் தரம் உயர்த்திட பார்வை 3ல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி தகுதி வாய்ந்த கணினி பயிற்றுநர் நிலை-2 இல் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பாக பட்டியல்கோரி பெறப்பட்டு பார்வை (6) இல் காண் செயல்முறைகள் வாயிலாக கணினி பயிற்றுநர் நிலை-1ஆக நிலை உயர்த்தி ஆணையிடப்பட்டது. பார்வை 4-ல் காண் அரசாணையில் கணினி பயிற்றுநர் நிலை-1ல் உள்ளவர்கள் 8 ஆண்டுகள் பணி முடித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்வளித்து அரசால் ஆணையிடப்பட்டது. 
தற்போது பல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து கணினி பயிற்றுநர் கணினி பயிற்றுநர் நிலை-1ஆக நிலை உயர்த்துவது சார்பாக நிலை-!l பணியிடங்கள் கருத்துருக்கள் பெறப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment