01.01.2023 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த திருத்திய பணிமூப்பு இறுதிப்பட்டியல் (Revised Rotation 17.08.2023) வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 17, 2023

01.01.2023 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த திருத்திய பணிமூப்பு இறுதிப்பட்டியல் (Revised Rotation 17.08.2023) வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பார்வை(5)ல் காணும் செயல்முறைகளின்படி, 01.01.2023 அன்றைய நிலவரப்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான அரசு உ யர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தம், நீக்கம், சேர்க்கை மற்றும் மேல்முறையீடுகள் பெறப்பட்டு திருத்திய முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது. 


இறுதியாக 14.08.2023 நாளிட்ட செயல்முறைகள் வாயிலாக சுழற்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது திருத்திய சுழற்சிப் பட்டியல் அனுப்பப்படுகிறது. மேற்படி திருத்தம் செய்யப்பட்ட முன்னுரிமைப்பட்டியலில் பார்வை 1-ல் காண் அரசாணையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி சிறப்பு விதிகளில் விதி 2(b)(i)-ல் வரையறுக்கப்பட்டவாறு சுழற்சி பட்டியல் 2: 7 என்ற அடிப்படையில் தயார் செய்யப்பட்டதில் 836 முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்றவாறு 182 உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பெயர் சேர்க்கப்பட்டு 819 ஆசிரியர்களுக்கான திருத்திய சுழற்சிப் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் அனுப்பப்படுகிறது. 

மேற்படி சுழற்சிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், இச்சுழற்சிப் பட்டியலை அந்தந்த ஆய்வு அலுவலர்கள் உரிய நபர்களுக்கு தகவல் அளிக்கவும் மற்றும் தங்களின் அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பு-திருத்திய சுழற்சிப் பட்டியல்

No comments:

Post a Comment