பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி வகுப்புகள் கல்வித்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 26, 2023

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி வகுப்புகள் கல்வித்துறை தகவல்

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி வகுப்புகள் கல்வித்துறை தகவல் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பொருள் சார்ந்த வழிகாட்டி வகுப்புகள் நடத்துவது தொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
அதன்படி, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்புகளில் நடத்தவேண்டிய பாடங்கள், பாடத்திட்டங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை பின்பற்றி பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த பாடத்திட்டங்களை உடனடியாக வழங்கவேண்டும். 

இந்த வகுப்புகளை பள்ளியின் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் நடத்தப்படவேண்டும். மேலும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் வழங்க பள்ளிக்கு அழைத்து வரப்படும் துறைசார் வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

No comments:

Post a Comment