10ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 9, 2023

10ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,சென்னை- 600 006 மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் திருமதிமாஆர்த்தி.இ.ஆ.ர ந.கா.எண்: 2439/ஆ2/நா.மு/ஓபக/2023 நாள்: 04.08.2023 பொருள்: ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி - நான் முதல்வன் திட்டம் . 10 ஆம் வகுப்பு துணைத் நேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்று - 11 ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் = சார்ந்து. 

அரசு பள்ளிகளில் பயின்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கடந்த ஜூன் - ஜூலை 2023-ல் துணைத் தேர்வு எழுதியுள்ளார்கள்.தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த 24.072023 அன்று வெளியாகி உள்ள நிலையில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களில் 21951 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் 11 ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதிச்செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தலைமையாசிரியர்களுக்கான பொறுப்புகள் 

துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவறாமல் பள்ளிகளுக்கு வந்து மதிப்பெண் சான்றிதழ் பெறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும். > தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு விருப்பப் பாட பிரிவு மற்றும் பள்ளிகளில் சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருதல் வேண்டும். பெறுநர் 11ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரங்களை EMISதளத்தில் பதிவேற்றம் செய்திட சார்ந்த தலைமையாசிரியர்களை அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள். 


நகல் 23 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் Would மாநில திட்ட இயக்குநருக்காக அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக)

No comments:

Post a Comment