10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் - கூடுதல் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 11, 2023

10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் - கூடுதல் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

சென்னை-06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள். ந.க.எண்.069381 /கே/இ1/2018 நாள்: 08.2023 
பொருள் பளளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத அனைத்து வகை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்/கூடுதல் விவரங்களுடன் கருத்துருக்களின் விவரப் படிவம் மற்றும் அதன் சுருக்கம் அடங்கிய ஒரு கூடுதல் நகல் தேவைப்படுவதால் அதனை இவ்வியக்ககத்திற்கு 17/08/2023-க்குள் அனுப்புவதற்கு தெரிவித்தல் - ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த கருத்துருக்களுக்குடன் சரிபார்ப்பு சான்று அனுப்பக் கோருதல் - சார்ந்து 

1. அரசுக் பார்வை கடிதம் எண். நாள்.07.04.2022, 12.04.2023 மற்றும் 31.07.2023 

2. சென்னை-06, பள்ளிக் கல்வி இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள், இணை ந.க.எண்.069381/ கே/ இ1/2018, நாள்.26/04/2022,11.05.2022 மற்றும் 31.05.2022. 

3. இவ்வலுவலகத்தின் எண்ணிட்ட கடிதம் நாள்.18.11.2022 

4. முதன்மைக்கல்வி அலுவலர்களின் ஆலோசணை கூட்டம் ஏப்ரல் -2023 சார்ந்து 04/05/2023 அன்று நடந்த இணைய வழி கூட்டம் இணை இயக்குநர் (தொழிற்கல்வி) கூட்டப்பொருளில் தங்களது மாவட்ட நேர்முக உதவியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது இதே மற்றும் 02.03.2023. 

பார்வையில் கண்டுள்ளவாறு, 10.03.2020-க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று, ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களுக்கு, பார்வை 1-இல் காணும் அரசுக் கடிதத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கூடுதல் தகவல்களை உறுதி செய்வதற்கு. பார்வை (2 & 3)ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பெறப்பட்ட கருத்துருக்களின் விவரப் படிவம் மற்றும் அதன் சுருக்கம் அடங்கிய ஒரு கூடுதல் நகல் தேவைப்படுவதால், அதனை இவ்வியக்ககத்திற்கு 17/08/2023-க்குள் அனுப்புவதற்கு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த கருத்துருக்களுடன் இணைப்பில் காணும் சரிபார்ப்பு சான்று அனுப்புமாறும். இந்நிகழ்வில் எந்தவித காலதாமதம் மற்றும் நினைவூட்டலுக்கு இடமின்றி செயல்படுமாறும் மீண்டும் வலியுறுத்தி தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment