அரசு கலைக்கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர 14-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 11, 2023

அரசு கலைக்கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர 14-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

அரசு கலைக்கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர 14-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 

தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 24 ஆயிரத்து 341 முதுகலை பட்டப்படிப்புகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதளங்களில் சென்று ஆன்லைன் வாயிலாக 14-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், ஆன்லைன் வாயிலாகக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் 'The Director, Directorate of collegiate education, chennai-15' என்ற பெயரில் வரைவோலை மூலமாக செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், இதுதொடர்பான விவரங்களை அறிய 9363462070, 9363462042, 9363462007, 9363462024 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் கல்லூரிக்கல்வி இயக்குனர் கீதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment