ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி, சென்னை-600 006
மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்:1680/A11/பமேகு/ஒபக/2023, நாள். 21/08/2023.
பொருள்:
ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2023, செப்டம்பர்
மாதப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்துதல்
வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.
பார்வை-1:
பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும்
ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர்
அவர்களின் இணைச் செயல்முறைகள்
பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின்படி பள்ளி மேலாண்மைக்
குழுவின் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் மாதத்தின் முதல்
வெள்ளிக்கிழமையன்று மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக,
ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று நடைபெற்றக் கிராம சபைக் கூட்டத்தில்
பங்கேற்றுப் பள்ளியின் மிக முக்கியத் தேவைகளை ஊராட்சியின் கவனத்திற்குக்
கொண்டு சென்ற அனைத்துப் பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி
மேலாண்மைக் குழுத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும்
பள்ளிக் கல்வித்துறையின் பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment